Saturday, December 16, 2006

காதல் ஒரு இனிய விஷம்

காதல் ஒரு இனிய விஷம் அன்று காதல் காதல் என்று கவி சிந்தி காவியமாக்கினாய் நம் காதலை இன்று காதலை காணல் நீராக்கி விட்டாயே. காலத்தையும் கனிய வைப்பேன்.. என நம்பிக்கை தந்தாய் இப்போ.. என்னையும் மறந்து காலத்தையும் மறந்து நேரத்தையும் மறந்து தூங்குகின்றாயே . உனக்காக எதையும் தியாகம் செய்வேன் காதலை மட்டும் தியாகம் செய்து கொள்ள மாட்டேன் . உன்னை நினைத்து கண்ணீர் சிந்தியும் காதல் கரைந்து போகவில்லை என்னும்.

Thursday, December 14, 2006

காதல் ஒரு இனிய விஷம் 6என் மனதில் ஆயிரம் சுமைகள் உன் சுமைகளை சுமந்து கொள்வதால். ----- உனக்கென நான் பிறந்ததால் தான் நான் தூரத்தில் இருந்தாலும் நீ.. ரசிக்கின்றாய். ----- என் மனதை நான் தேடுவதில்லை.. அது உன்னிடம் சுற்றி கொண்டு இருப்பதால். -------- மழை வந்தால் தான் எனக்கு பிடிக்கும் அப்போதுதான் இருவரும் ஒரு குடைக்குள் செல்லல..முடியும் .--------- ராகினி.

Wednesday, December 06, 2006

நான் பூவை ரசிக்கவில்லை. அதில் வீசிய நறுமணம் போனதால். நான் பறவையை ரசிக்கவில்லை. இதன் சிறகுகள் உடைந்ததால்.

Tuesday, December 05, 2006

காதல் ஒரு இனிய விஷம் 5 மறக்கவில்லை நினைக்கின்றேன் உறங்கவில்லை துடிக்கின்றேன் உன்னை சுமந்து ---- தீபாவளியில் தீபம் ஓய்ந்தாலும் என் இதய ஒளியில் நீ..என்றும் ஓய.. மாட்டாய். -- உன் கையில் இருப்பது மது பாணம் அதனுள் கலந்தது என் ரத்ததானம் --- செந்தமிழ் சொல் கொண்டு கவி சிந்தும் உன் செவ்விதழில் நான் சிந்திய... முத்தம்ஒன்று தான் நீ.. நித்தம் குடிக்கும் தேனீர். ராகினி